சொத்து பிரச்சனையால் வீட்டுச் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி; பசி கொடுமையில் செய்த அவலம்

0
486

 தமிழகத்தின் தஞ்சாவூரில், 10 ஆண்டுகளாக உணவு கொடுக்காமல் வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் பசிக்கொடுமையால் மண்ணைதின்ற சம்பவம் அதிச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

இந்நிலையில் அம்ம் மூதாட்டியை சமூகநலத்துறையினர் மீட்டுள்ளனர். தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 70 வயதான மூதாட்டி ஒருவர் வீட்டு சிறையில் இருப்பதாக சமூக நலத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் பார்த்தபோது, மூதாட்டியின் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக காட்சி அளித்தார். பசியின் கொடுமையை தாங்க முடியாத அவர், கீழே கிடந்த மண்ணை எடுத்து சாப்பிட்ட அவலமும் நிகழ்ந்துள்ளது.

இதுபற்றிய தகவல் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்ததும், அவரது உத்தரவின் பேரில், சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதேவேளை மூதாட்டி ஞானஜோதியின் கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்பதும் மாத ஓய்வூதியமாக 30 ஆயிரம் ரூபாய் பெற்று வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.

அத்துடன் அவருடைய 2 மகன்களில் மூத்த மகன் சென்னையில் பொலிஸ் ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும், பட்டுக்கோட்டையில் வசிக்கும் இரண்டாவது மகன் தொலைக்காட்சியில் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது.

சகோதரர்கள் இருவருக்கும் இடையே இருந்த சொத்துப் பிரச்சனையில்,பெற்ற தாயை 10 ஆண்டுகளுக்கு மேலாக உரிய பராமரிப்பு இன்றி தாயை வீட்டில் பூட்டி வைத்திருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சமூக நலத்துறை குழுவினர் தமிழ்ப் பல்கலைக்கழக பொலிஸார் பாதுகாப்புடன் சென்று மூதாட்டியை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  அனுமதித்துள்ளனர்.