போராட்டக்களத்தில் கோட்டாபயவின் மரண அறிவித்தல் துண்டு பிரசுரங்கள்!

0
138

சிறிலங்கா அரச தலைவருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக தொடர்ச்சியான மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு காலி முகத்திடலுக்கு அண்மையில் அமைந்துள்ள அரச தலைவர் செயலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்ட களத்தில் கோட்டாபயவிற்கு மரண அறிவிப்பு வெளியிடுவது போன்ற துண்டுப்பிரசுரத்துடன் கூடிய மலர்வளையத்தை ஏந்தியவாறு பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் போது கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு அரச தலைவர் செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள், உணவுப் பொருள், எரிவாயு, மருந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.