ஆர்.பிரேமதாச மைதானம் போல் காட்சியளித்த காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம்!

0
169

இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக 6வது நாளாக நாட்டு மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் புத்தாண்டு தினமும் மக்கள் கொழும்பு காலிமுகத்திடலில் பாரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு (Gotabaya Rajapaksa) எதிராக காலி முகத்திடலில் இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் இலங்கை கிரிக்கெட் போட்டியின் போது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் போல் காட்சியளிப்பதாக முகநூலில் Azzam Ameen என்ற நபர் பதிவிட்டுள்ளார்.