காலிமுகத் திடல் போராட்ட களத்திற்கு சென்ற நடிகை

0
169

காலிமுகத் திடலில் எதிர்ப்பு போராட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டாலும் இந்த போராட்டத்தை தான் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டதாக பிரபல சிங்கள திரைப்பட நடிகை தில்ஹானி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெறறும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் எதிர்காலம் பற்றி தனக்குள் ஒரு அச்சம் இருந்ததாகவும் அந்த அச்சம் தற்போது நீங்கி விட்டதாகவும் தில்ஹானி ஏக்கநாயக்க கூறியுள்ளார்.

அழகான நாட்டில் மரணிக்க தனக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு அவர் போராட்டம் நடத்தி வரும் இளைஞர், யுவதிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறும் மக்களின் போராட்டம் இன்று 7வது நாளாகவும் தொடர்ந்தும் நடைபெறுகிறது.