நாட்டின் நெருக்கடிகளுக்கு எவ்வித தீர்வும் இல்லை:பிரதமரின் உரையில் தெரிகின்றது

0
180

ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு எவ்வித தீர்வும் இல்லை என்பது பிரதமரின் நாட்டு மக்களுக்கான உரையிலிருந்து தெளிவாக புரிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மூலம் புலப்படுவது எமது மக்கள் என்ன கோருகின்றனர் என்ற நிலைப்பாட்டை முற்றிலும் புரிந்து கொள்ளாத விதமாகவே பதிலை வழங்கியுள்ளார் என்பதையாகும்.

பிரதமரின் அறிக்கையில், நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கான தீர்வை முன்வைக்கவோ அல்லது அதற்குத் தேவையான மாற்றீடுகள் எதுவுமோ முன்வைக்கப்படவில்லை. குறைந்த பட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் அனுதாபங்களைக் கூட முன்வைக்கவில்லலை.

இதுவரை, நான்கு பேர் எரிபொருள் வரிசையில் இறந்துள்ளனர். எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதையொத்த அளவே காணப்படுகின்றன.

இப்படிப்பட்ட துரதிஷ்டமான சூழ்நிலையில் மக்கள் படும் துயரங்கள் குறித்து பிரதமருக்கு எந்த புரிதலும் இல்லை என்பது அவரது அறிக்கையிலிருந்து தெளிவாகிறது.

அதிஷ்டவசமாக யுத்த வெற்றி மற்றும் இராணுவ வீரர்களை முன்னிலைப்படுத்தி, தங்களுடைய அரசியல் கலாசரத்திற்குள் முன்வைத்து, பழைய புராணத்தை பாடி, ஜனாதிபதி உள்ளிட்ட ராஜபக்ஷக்களை வீட்டுக்குச் செல்லுமாறு இளைஞர் யுவதிகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு திரிவுபடுத்தப்பட்ட விளக்கத்தை கொண்டுவர முயற்சிக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலின் வங்குரோத்து என்பதை தெளிவாக காட்டுகிறது.