மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று விசேட பூஜைகள்

0
164

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இன்று விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து விசேட சித்திரைப் புத்தாண்டு பூஜை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை நீங்கி நாட்டின் அரசும், மக்களும் சிறக்க விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டதுடன், கைவிசேடங்களும் வழங்கி  வைக்கப்பட்டுள்ளன.