அமெரிக்க ஜனாதிபதி பைடனை கேலிக்குள்ளாக்கும் சவூதியின் நிகழ்ச்சி: நாடுகளுக்கிடையில் முரண்பாடு ஏட்படலாம்!

0
543

அமெரிக்க ஜனாதிபதி பைடனின் அழைப்பை, சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் புறக்கணித்தமையும், பைடனை கேலிக்குள்ளாக்கி சவூதி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பட்ட அரசியல் கேலிச்சித்திர நிகழ்ச்சியும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தலாம் என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

உக்ரைன் மீது ரஸ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் காரணமாக மசகு எண்ணெய்யின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அது குறித்து பேசுவதற்கான கோரிக்கையை அமெரிக்கா, சவூதி இளவரசருக்கு விடுத்திருந்தது.

எனினும் அவர் அதனை நிராகரித்து விட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பதவியேற்றது முதல் இதுவரை தம்முடன் தொடர்பை பேணவில்லை என்று கூறியுள்ள சவூதி இளவரசர், அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்து விட்டார்.

இதற்கு சமாந்தரமாக சவூதி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பட்ட அரசியல் கேலிச்சித்திர நிகழ்ச்சி ஒன்றில், பைடன் நினைவாற்றல் இல்லாதவறாக காட்டப்பட்டுள்ளார்.

அத்துடன் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், அவருக்கு நினைவாற்றலை கொண்டு வருவதாகவும் அந்த நிகழச்சியில் காண்பிக்கப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பைடனான நடித்தவர், கமலா ஹாரிஸை தெ பெஸ்ட் லேடி( நாட்டின் தலைவருடைய மனைவியரை குறிக்கும் முதல் பெண்மணி) என்று அழைக்கிறார்.

இதன்படி ரஸ்யாவை பற்றி பேச முயற்சிக்கும் பைடன், ரஸ்ய ஜனாதிபதியின் பெயரை மறந்துவிட கமலா ஹாரிஸ், புடின் என்று நினைவுப்படு;த்துகிறார்.

இதன்பின்னர், “புடின் நன்றாக என்னை கவனியுங்கள். உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி சொல்ல போகிறேன்” ஏன்று கூறிய பைடனாக நடிப்பவர், அந்த செய்தி… என கூறி கொண்டிருக்கும்போதே நித்திரை கொள்வதாக காட்சி அமைக்கப்பட்;டுள்ளது.

இதனை கவனித்த கமலா ஹாரிஸ் அவரை தட்டியெழுப்புகிறார்.

எனினும் திடுக்கிட்டு விழித்துக்கொண்ட பைடன், சீன ஜனாதிபதியை விளித்து தமது உரையை தொடர்கிறார்.

எனினும் மீண்டும் நித்திரை அவரை ஆட்கொள்கிறது.

இந்த காணொளி தற்போது அதிகமாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக அமெரிக்க- சவுதி அரேபியா இடையிலான உறவில் மேலும் முரண்பாடு ஏற்படக்கூடும் என்று எதிர்வுகூறப்படுகிறது