போராட்டக்களத்திற்கு பலகாரங்களுடன் செல்லத்தயாராகும் மக்கள்!

0
419

காலி முகத்திடலில் தொடர்ந்து 6வது நாளாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்றைய தினம் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, பலகாரங்கள் செய்து, போராட்டக்காரர்களின் நலன் விசாரிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள மக்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தாண்டு கலாசாரத்திற்கமைய, உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும் வகையில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக நீர்கொழும்பில் உள்ள அனைத்து மக்களும் தயாராகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் அண்மையில் நீர்கொழும்பில் இருந்து மீன்களை சமைத்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் பாரிய அளவிலான மக்கள், ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்திற்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.