இன்றைய ராசிபலன் {13 ஏப்ரல் 2022}

0
596

மேஷம்

மேஷ ராசிக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் வேலையைச் சிறப்பாக செய்து நற்பெயர் பெறுவீர்கள். உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். வருங்காலம் குறித்த யோசனையும், சேமிப்பையும் முன்னெடுப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதமாகலாம். உங்களின் புத்திசாலித்தால் உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு மிகவும் மன மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். உடல் நலம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வியாபாரத்தில் சில புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். வெற்றி பெறுவதற்காக எப்படிப்பட்ட ஆபத்தான முறைகளைக் கையாள தயங்கமாட்டீர்கள்.

சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணியிடம், சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசியினர் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் மன வேதனையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். தடைப்பட்ட வேலையை முடிக்க முயற்சிக்கலாம். தொழில், வியாபாரத்தில் கவனமாக உங்கள் செயல்பாடுகளைக் கையாளவும். காப்பீடு அல்லது முதலீடு விஷயங்கள் குறித்து சிந்திப்பீர்கள். சிறிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல பலன் தரக்கூடியதாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி, தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். உங்களின் நல்ல நடத்தையால் உங்களை சுற்றியுள்ளவர்களைக் கவர்வீர்கள். புதிய யோசனைகள், திறமைகளின் வெளிப்பாட்டால் முழுப் பலன் பெறுவீர்கள். பணி மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வியாபார கிளை அல்லது பணி விரிவாக்கத்திற்காகக் கடன் வாங்க நேரிடலாம். பண விஷயத்தில் சாதகமான பலன் கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். முன்னேற்றம் காண கடினமாக உழைப்பீர்கள்.

சிம்மம்

சிம்மம் ராசிக்கு பல வகையில் அதிர்ஷ்டம் ஆதரிக்கக்கூடிய நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் உங்கள் செயல்களை முன்னெடுப்பீர்கள். புதிய வருமான ஆதாயங்களைப் பெறுவீர்கள். பொருளாதார நிலைமை முன்பை விட வலுவாக இருக்கும்.

மேலதிகாரிகள், பெரியோரின் ஆலோசனையை அலட்சியப்படுத்த வேண்டாம். திருமண முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. அதிக கோபம் வர வாய்ப்புள்ளது என்பதால், கோபத்தைக் கட்டுப்படுத்தவும்.

கன்னி

கன்னி ராசிக்கு அதிர்ஷ்ட பலன் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும் புதிய யோசனை, திட்டங்கள் உங்களை நிதி ரீதியான பலன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அசையா சொத்துக்கள் விற்பது தொடர்பான பிரச்னைகள் தீரும். புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. உங்கள் பணி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்கு நல்ல செய்திகள் கிடைக்கக்கூடிய நாள். உங்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். இருப்பினும் நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு செயலிலும் கவனம் செலுத்துவது நல்லது. முக்கிய வேலை ஒன்றை செய்து முடித்து மன நிறைவு பெறுவீர்கள்.
எந்த ஒரு பொருளாதார திட்டத்தை முன்னெடுக்கும் முன் அதன் யதார்த்தத்தை மனதில் வைத்து முடிவெடுக்கவும். காதல் வாழ்க்கையில் சில சிரமமான விஷயங்கள் நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு நற்பலன் அதிகம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பொதுவாக எதையும் நினைத்து வருத்தப்பட மாட்டீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு முழுமையாக இருக்கும். பிள்ளைகள் வகையில் ஆதாயமும், ஆதரவும் இருக்கும்.

முதலீடு சார்ந்த விஷயங்களில் வருத்தம் தரும் சில நிகழ்வு நடக்கலாம். கலைஞர்களுக்கு சிறப்பான நாளாகும். வாழ்க்கைத் துணையுடன் வருங்காலம் குறித்து சில புதிய திட்டமிடல்கள் குறித்து பேசுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் ஆச்சரியங்கள் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். நேர்மையான மனதுடன் செய்யக்கூடிய எந்த ஒரு செயலிலும் நல்ல வெற்றி மன நிறைவு தரும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் லாபகரமான பலன் தரும். பணப் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். கலைஞர்களுக்கு சாதகமான இருக்கும். அற்ப பேராசையிலிருந்து விலக்கி இருக்கவும்.

மகரம்

மகர ராசிக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகள், திட்டங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.
திருமண உறவில் சில சங்கடங்களைத் தரக்கூடியதாக இருக்கும். சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் நிதானம் தேவை. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஆகலாம். மனதில் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எந்த ஒரு முக்கிய முடிவெடுப்பதைத் தவிர்க்கவும். விநாயகரை வழிபட்டு வேலையைத் தொடங்கவும்.

கும்பம்

கும்ப ராசிக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு வேலையை சிறப்பாக செயது முடிப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது குடும்ப உறுப்பினர்களின் தகுந்த ஆலோசனை செய்வது நல்லது.
ஆடை, ஆபரண பாக்கியம் உண்டு. பெண்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிரிகளை எளிதாக கையாள்வீர்கள்.

மீனம்

மீன ராசியினர் இன்று எந்த ஒரு விஷயத்தையும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணி தொடர்பான விஷயங்களில் படிப்படியாக முன்னேற்றம் காணப்படும். இணைந்து வேலை செய்வார்கள். பெரிய தொழில் சம்பந்தமான எந்த பிரச்சனையும் தீர்க்கப்படும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியான தருணங்களைக் கழிப்பீர்கள். உறவுகளில் சில புதிய புத்துணர்ச்சி ஏற்படும்.