நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் அரச தலைவர் பதவி விலகினால் இதுவே நடக்கும்:ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கை

0
147

நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் அரச தலைவர் பதவி விலகுவாராயின் நாடு மேலும் சின்னாபின்னமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து புதிய பிரதமர் மற்றும் சர்வகட்சி அமைச்சரவை ஒன்றை உருவாக்குவதே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து அது தோல்வியுற்றால் தற்போதைய அரசாங்கம் மேலும் பலமடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.