தமிழ் இனம் தனிநாடு கேட்டதே இன்றைய நெருக்கடிக்கு காரணமாம்! – முஸ்லிம் எம்.பி ரிசாத்

0
172

 நாட்டில் ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக , தென்னிலங்கை மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், காலி முகத்திடலில் இன்று ஐந்தாவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபயவை யார் ஆட்சியில் அமர வைத்தார்களோ அந்த மக்களே இன்று அவரை பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் தமிழ் இனம் தனிநாடு கேட்டதே இன்றைய நெருக்கடிக்கு காரணம் என முஸ்லிம் எம்.பி ரிசாத் கூறுகின்றாராம். இது குறித்து தோழர் பாலன் என்பவவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழ் இனம் தனிநாடு கேட்டதே இன்றைய நெருக்கடிக்கு காரணம் என முஸ்லிம் எம்.பி ரிசாத் கூறுகிறார்.

ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழித்தால் இன்றைய பிரச்சனை தீரும் என்கிறார் சுமந்திரன் எம்.பி.

ஆனால், தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரிக்காதவரை சிங்கள மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்ற உண்மையை எந்தவொரு தலைவரும் கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.