விஜய் 10 வருடமாக மீடியாவை ஒதுக்க காரணம் இது தானா?!

0
172

 சமீபத்தில் நடிகர் விஜய் சன் டிவியில் பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டி பற்றி தான் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஜய் மீடியாவில் பேட்டி கொடுப்பதை கடந்த 10 வருடங்களாக நிறுத்தி இருந்தார். அதற்கான காரணம் என்ன என்பதை நெல்சன் சன் டிவி பேட்டியில் கேட்டிருந்தார். அதற்கு பதில் கூறிய விஜய் தான் 11 வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டி அளித்தபோது நான் சொன்னதை மாற்றி எழுதிவிட்டார்கள்.

பலரும் அதை பற்றி என்னிடம் கேட்டனர். அந்த பேட்டியை படிப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று விளக்கம் கொடுக்க முடியாது. அதற்கு பிறகு தான் நான் பேட்டி கொடுப்பதை நிறுத்திக்கொண்டேன். ஆடியோ லாஞ்சில் மட்டும் சமீப காலமாக பேசிவருகிறேன் என கூறினார்.

விஜய் குறிப்பிட்ட அந்த பேட்டி ஒரு முன்னணி வார இதழுக்கு கொடுத்தது தான். அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.