இழுத்தடிக்காது பிரதமரும், அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் – விமல் விரவன்ச

0
186

பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், அரசாங்கமும் உடனடியாக பதவிவிலக வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் விரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், ஊடகங்களிடம் பேசுகையில் அவர் இதனைத் கூறினார்.

உரிய தீர்வை வழங்காமல், அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்குரிய நிலைமையை மேலும் தீவிரமடையச் செய்ய இடமளித்து, பழைய முறைமையிலேயே முன்னோக்கிச் செல்ல முயற்சிக்கிறதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

அவர்களின் அந்தப் பயணத்திற்கு இந்த நாட்டு மக்களிடம் இனிமேலும் இடமில்லை என தெரிவித்த விமல் வீரங்ச, நாட்டை இந்த சிக்கல் நிலைக்கு உள்ளாக்கியவர்கள், தொடர்ந்தும் அரசாங்கத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், இந்த நாடு தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்ல முடியாது. எனவே, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவிவிலகி, புதிய ஆட்சியை உருவாக்க இடமளிக்க வேண்டும் எனவும் விமல் வீரவன்ஸ இதன்போது மேலும் கூறினார்.