மனம் மாறிய மூத்த சிங்கள இசைக்கலைஞர்! ராஜபக்சர்களை ஆதரித்தமைக்கு மனம் வருந்துவதாக தெரிவிப்பு

0
203

ராஜபக்சக்களை ஆதரித்தமைக்கு வருந்துவதாகவும், அது தனது வாழ்வில் அழிக்க முடியாத கரும்புள்ளியாக மாறியுள்ளதாகவும் மூத்த இசைக்கலைஞர் கலாநிதி ரோஹண வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ள போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச அரச தலைவராக வருவதற்கு இந்த கலைஞரும் தனது முழுமையான ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.