பசிலை வெளிப்படையாகச் சாடிய சஜித்

0
149

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசும் நடவடிக்கைகளை பசில் ராஜபக்ச நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமது கட்சியின் உறுப்பினர்களை வாங்க முயன்றதாக வெளிப்படையாகவே சாடியுள்ளார்.

இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரம்பேசி வாங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.