ரஷ்யா – உக்ரைன் போரால் சிக்கித் தவிக்கும் இலங்கை

0
183

ஆசியாவில் சிறிய தீவு நாடான இலங்கை வெறும் 2.2 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு, இப்போது பல தசாப்தங்களில் இல்லாத வகையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. உணவு, எரிவாயு, பெட்ரோலிய பொருட்களின் விலைகள் பணவீக்கத்துடன் சேர்த்து இரட்டை இலக்க அளவில் மாதக்கணக்கில் உச்சம் தொட்டு உயர்ந்து வருகின்றன.

​​மின்சாரம் துண்டிக்கப்படுவதும், ஏடிஎம் மையங்கள் காலியாக இருப்பதும், பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதும் வழக்கமான காட்சிகளாகி விட்டன.

சுப்ப மார்க்கெட்டுகளில் உள்ள அலுமாரிகள் முற்றிலும் காலியாக வைக்கப்பட்டுள்ளன. இலங்கையர்கள் பெரும்பாலும் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளதை இந்தக் காட்சிகள் காட்டுவதாக உள்ளன. பணவீக்கம் காரணமாக பலர் உணவைத் தவிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.