உக்ரைனில் செயற்பட்டு வந்த ரஸ்ய சார்பு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக் கைது!

0
174

உக்ரைனில் தேசத்துரோக அரசியல்வாதி கைது: ரஸ்யாவினால் தடை செய்யப்பட்ட கொத்தணி குண்டு தாக்குதல் உக்ரைனில் செயற்பட்டு வந்த ரஸ்ய சார்பு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக்கை கைது செய்துள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

அவர், தேசத் துரோக குற்றச்சாட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார், உக்ரைனில் ரஸ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் அவர் தமது இருப்பிடத்தில் இருந்து தப்பிச்சென்றிருந்தார்.

இந்தநிலையில் ரஸ்ய படையினரால் கைது செய்யப்பட்ட உக்ரைனியர்களை விடுவித்துக்கொள்ளும் முகமாக அவரை கைதி பரிமாற்றம் செய்து கொள்ள உக்ரைன் ஜனாதிபதி முன்வந்துள்ளார்.

இதேவேளை சர்வதேச சட்டத்தின் கீழ் பல நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்தணி(கிளஸ்டர்) வெடிகுண்டு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் தொடரூந்து நிலையத்தில் நடந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குண்டு ஏவப்பட்டு நிலத்தில் வீழ்ந்ததும் பகுதியில் பரவி வெடிக்கும் தன்மைக்கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த குறித்த தொடரூந்து நிலையத்தில் இடம்பெற்ற இந்த குண்டுத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

 இதேவேளை போர்க்குற்றங்கள் குறித்து உக்ரைன் போலியான குற்றச்சாட்டுக்களை கூறியதையடுத்து, அமைதிப் பேச்சு வார்த்தை முட்டுக்கட்டை அடைந்துவிட்டதாக பெலாரஸின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.