தெற்கு கரையோரப்பகுதியில் பெருமளவு போதைப்பொருள்கள் மீட்பு

0
162

தெற்கு கரையோரப் பகுதியில் பாரியளவில் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

சுமார் 300 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் மற்றும் 25 கிலோகிராம் எடையுடைய ஐஸ் ஆகிய போதைப்பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

படகு ஒன்றின் மூலம் நாட்டுக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் படகில் பயணம் செய்த ஆறு பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அரச புலனாய்வுப் பிரிவு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆகியனவற்றுடன் இணைந்து கடற்படையினர் குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.