இலங்கையின் இரத்தம் இவ்வளவு கருணையுள்ளதென நான் நினைக்கவே இல்லை: மருத்துவர் சமன் குமார வெளியிட்ட தகவல்

0
522

இலங்கையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காக்க ET குழாய்கள் இல்லாதது குறித்து தான் வெளியிட்ட பதிவு மக்களின் இரக்க குணத்தை வெளிப்படுத்தியதாக விசேட மருத்துவர் சமன் குமார தெரிவித்துள்ளார்.

ET குழாய்கள் இல்லாதது குறித்து தான் தனது மருத்துவ நண்பர்கள் அனுப்பிய செய்தி உலகம் முழுவதும் வேகமாகப் பரவி, தற்போது உலகம் முழுவதும் ஏராளமானோர் தேவையான உபகரணங்களை வழங்க மும்முரம் காட்டி வருகின்றனர் என காசல் ஸ்ட்ரீட் மகளிர் மருத்துவமனையின் குறைப்பிரசவ விசேட மருத்துவர் சமன் குமார தெரிவித்துள்ளார்.

இதன் அவசியம் குறித்து விசாரித்து நாள் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அவற்றில் சுமார் 500 அழைப்புகளுக்கு பதிலளிக்கப்பட்டதாகவும் ஆனால் 400 க்கும் மேற்பட்டவை தவறவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது மருத்துவமனைகளுக்கு போதுமான ET குழாய்கள் கிடைத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் தேவைப்படும் மருத்துவ உதவி பொருட்களை வழங்குவதற்கு உதவுங்கள் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில்,

“முதலில், எனது கோரிக்கைக்கு இவ்வளவு விரைவாக பதிலளித்தமைக்காக, குறைப்பிரசவங்களுக்கான இலங்கை சங்கத்தின் தலைவர் என்ற வகையில் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவு பற்றி நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதற்கு விரும்புவதில்லை. ஆனால் எனது நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பினேன். ஆனால் சிலர் எனது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை இணைத்து செய்து தகவலை பகிர்ந்தனர்.

இது உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. எனக்கு உலகம் முழுவதும் வாழும் இலங்கையர்களிடம் இருந்து அழைப்புகள் கிடைத்தன. இரவு பகலாக கிட்டத்தட்ட 500 உள்வரும் அழைப்புகளுக்கு பதிலளித்தேன். 400க்கும் மேற்பட்ட தவறவிட்ட அழைப்புகளும் உள்ளன. இன்றும் அதே நிலைதான்.

நான் மிகவும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பதில் நேரம் செலுத்தும் விசேட மருத்துவர். இந்த அழைப்புகள் மற்றும் செய்திகளின் அளவைக் கையாள்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. பதில் சொல்லாமல் இருப்பது குறித்து சிலர் என் மீது கோபமாக இருப்பதும் எனக்குத் தெரியும். நேற்றைய அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்காக அதிகாலை 3 மணிவரை தூங்காமல் இருப்பதற்கு நேரிட்டது.

நீங்கள் அனைவரும் நாட்டுக்கு உதவ முயற்சிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த பெரிய அர்ப்பணிப்பை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. உங்கள் அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இலங்கையின் இரத்தம் இவ்வளவு கருணையுள்ளதென நான் நினைக்கவே இல்லை எனக்கு அதை விளக்க வார்த்தைகள் இல்லை 24 மணி நேரத்திற்குள் உலகம் முழுவதும் உள்ள நீங்கள் அனைவருக்கும் போதுமான ET குழாய்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளீர்கள். இனி ET குழாய்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

ஆனால் எங்களுக்கு வேறு சில முக்கிய பிரச்சனைகள் உள்ளன. நீங்கள் தொடர்ந்து நாட்டுக்கு உதவலாம். குழந்தை மருத்துவ நிறுவனம் மற்றும் Perinatal Society ஆகியவை விரைவில் பல இணையதளங்களைத் தொடங்கவுள்ளன.

விபரங்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். ஒவ்வொரு அழைப்புக்கும் செய்திக்கும் பதிலளிக்காததற்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முக்கியமான தருணத்தில் நமது தாய்நாட்டிற்கு உதவுவதற்கு மிக்க நன்றி. கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பார்” என அவர் பதிவிட்டுள்ளார்.