இலங்கையின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள்

0
179

பெருந்தொகை ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மீன்பிடி கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் கடற்படையினர், அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆகியோரின் கூட்டு முயற்சியிலேயே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 25 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் அடங்கிய போதைப்பொருட்களே நாட்டின்; தெற்கு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போதைப்பொருள் கடத்தலின் போது கப்பலில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்