மக்கள் போராட்டத்தில் இணைந்த முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர்

0
554

இலங்கை கிரிக்ட் அணியின் முன்னாள் புகழ்பெற்ற வீரர்களான ரொஷான் மஹாநாம மற்றும் சம்பக்க ராமநாயக்க ஆகியோர் காலி முகத் திடலில் நடைபெறும் இளைஞர், யுவதிகளின் போராட்டத்தில் இன்று இணைந்துக்கொண்டனர்.

அங்கு ரொஷான் மஹாநாம விசேட செய்தி ஒன்றை வழங்கினார்.

ஆட்சியாளர்களை நாம் மக்களின் ஊழியர்களாக கருத வேண்டும். நாம் தவறு செய்து, இவர்களை வைபவங்களுக்கு அழைக்கின்றோம். நாம் அனைவரும் இணைந்து சிறந்த நாட்டை உருவாக்குவோம்.

எனது விளையாட்டு வரலாற்றில் என்றும் வீதியில் இறங்கியதில்லை. இது சிறந்த சந்தர்ப்பம் மக்கள் என்ற வகையில் எம்மை ஒன்றிணைக்க முடிந்துள்ளது. நான் முன் வந்து எனது ஆதரவை தெரிவிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது.

விளையாட்டு ரசிகர்கள் காரணமாகவே எமது கிரிக்கெட் விளையாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடிந்தது. இந்த நெருக்கடியை உருவாக்கியது நாமல்ல, இதற்கு அருகில்( ஜனாதிபதி செயலகம்) இருப்போர்.

இங்கு இருக்கும் மக்களுக்கு தீர்வை வழங்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கின்றது. மக்களுக்காக மேல் இருக்கும் ஆட்சியாளர்களே தீர்மானங்களை எடுக்க வேண்டும். இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.

கஷ்டங்கள் அனைவருக்கும் புரிகின்றது. பெட்ரோல், டீசல், பால் மா இல்லை.மருந்தும் இல்லை இவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். யார் ஆட்சி வர வேண்டும் என்பது பிரச்சினையல்ல.அதிகார ஆசையை கைவிட வேண்டும். அரசியல்வாதிகள் தமது கடமையை நிறைவேற்ற முன் வர வேண்டும் என ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்.