நீர் மின் உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் கவனம் எடுக்க இலங்கை மின்சாரசபை தெரிவிப்பு

0
79

நீர் மின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

எரிபொருளைக் கொண்டு மின்சார உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

போதியளவு மழை கிடைக்கப் பெறுவதனால் நீர் மின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெருநகரங்களில் மழை பெய்வது போதுமானதல்ல எனவும், மலையகப் பகுதிகளில் நீர் மின்நிலையங்கள் காணப்படும் நீரேந்து நிலைகளில் போதியளவு மழை பெய்ய வேண்டுமெனவும் மின்சாரசபை தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு தொடர்ந்தும் டீசல் தேவைப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் போதியளவு மழை பெய்தால் டீசலின் அளவினை வரையறுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 10ம் திகதி நீர்மின் உற்பத்தி 29 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.