சிறிலங்கா அசரசாங்கத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயலும் பசில்- பகிரங்கமாக குற்றம் சாட்டும் விமல்!

0
568

பசில் ராஜபக்ஷ இன்னும் அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறார் என்று விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில், ‘தேசத்தை சரியான பாதையில் அழைத்துச் செல்வது’ எனும் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் இன்று  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டும் எனில் புதிய அரசாங்கத்தை அமைக்க பிரதமரும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

மேலும் 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை மூலம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என அவர்கள் கருதினால் முற்றிலும் தவறானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில் புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கும் அவர் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

அதேவேளை, இராஜாங்க அமைச்சுப் பதவிலிருந்து சாந்த பண்டாரவை நீக்கும் பட்சத்திலேயே தாம் அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுப்போம் எனவும் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

எவ்வாறெனினும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்த திட்டம் வெற்றியளிக்காமையாலேயே தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாக சாந்த பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.