இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

0
167

கடும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இந்தியா தயாராகவுள்ளதாக சர்வதேச செய்தி முகமை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐந்து முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.

எரிபொருள் உணவு உள்ளிட்ட பல உதவிகளை வழங்கி வருகின்றது. இவ்வாறான நிலையிலேயே இந்தியா மேலதிக உதவியை வழங்க முன்வந்துள்ளது.

இதற்கு முன்னர் 1.9 பில்லியன் டொலர்களை கடனாகவும், 500 மில்லியன் டொலர்களை எரிபொருள் இறக்குமதிக்கான கடனாகவும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.