கனடாவில் உடற்பயிற்சி கூடத்தில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்! குறித்த நபர் கைது

0
150

கனடாவில் உடற்பயிற்சி கூடத்தில் 14 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிச்மண்ட் ஹிலில் உள்ள ஜிம்மில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு 14 வயதான சிறுமி ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை அணுகிய Alessandro Berlingeri என்ற 45 வயது நபர் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியை தனியாக விட மறுத்த Alessandro அவரிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் Alessandro Berlingeri-ஐ கைது செய்தனர்.

அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் சிலர் இருக்கலாம் என கருதும் பொலிசார் அது குறித்து தங்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.