ரம்பொடை நீர்வீழ்ச்சியில் காணாமல் போன மூவர்: மீட்ப்பு நடவடிக்கையில் பொலிஸார்

0
65

ரம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து நேற்று முன்தினம் நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று மீண்டும் வவுனியாவுக்கு திரும்பும் வழியில், றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 7 பேர் கொண்ட குழுவினரில் மூவர் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

காணாமல் போன மூவரில் இருவர் பெண்கள் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேநேரம், ஏனைய 4 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன மூவரையும் கண்டறியும் நடவடிக்கையில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.