உக்ரைன் பெண்களை… ரஷ்ய வீரருக்கு அனுமதி வழங்கிய மனைவி

0
64

உக்ரைன் பெண்களை தாராளமாக கற்பழித்துக்கொள் என ரஷ்ய ராணுவ வீரர் ஒருவருக்கு அவரது மனைவி தெரிவித்தது தொடர்பான ஓடியோ வெளியாகி உலகநாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் தாக்குதலானது ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் அட்டூழியங்கள் சகித்துக்கொள்ள முடியாததாய் மாறியுள்ளது.

அதிலும் உக்ரைனிய பெண்கள் மீது ரஷ்ய ராணுவ வீரர்கள் நடத்திவரும் பாலியல் வன்முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருப்பதுடன் மிகப்பெரிய போர்க்குற்றம் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் செய்துவருவதாக உலக நாடுகள் ரஷ்யாவை எச்சரித்து வருகின்றனர்.

உதாரணமாக குழந்தைகள் முன்னபே அவர்களது தாயை கத்தியையும் துப்பாக்கியையும் காட்டி மிரட்டி ரஷ்ய ராணுவத்தினர் கற்பழித்தது முதல் உக்ரைனின் மற்றோரு இடத்தில் 9 வயது சிறுமியை 11 ரஷ்ய ராணுவ வீரர்கள் இணைந்து கற்பழித்து கொலை செய்தது போன்ற அடுக்கடுக்கான அட்டூழியங்கள் நிகழ்ந்து வருகிறது.

மேலும் பெண்கள் மீதான வன்முறைகளை குறித்து ரஷ்ய ராணுவ வீரர்கள் மீது எழுந்துள்ள குற்றசாட்டை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தநிலையில், உக்ரைன் பெண்களை தாராளமாக கற்பழித்து கொள், நான் உனக்கு அனுமதி தருகிறேன் என ரஷ்ய ராணுவ வீரரின் மனைவி பேசியது தொடர்பான ஓடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

அதில் உக்ரைனில் உள்ள பெண்களை கற்பழித்து கொள் ஆனால் என்னிடம் அதைப்பற்றி எதுவும் கூற கூடாது புரிகிறதா என கூறிவிட்டு சிரிக்கிறார். 

அதனை தொடர்ந்து நீ எனக்கு அனுமதி தருவாயா என ரஷ்ய ராணுவ வீரர் கேட்க, அதற்கான அனுமதியை உனக்கு நான் தருகிறேன், ஆனால் கருத்தடை சாதனத்தை(condom) உபயோகிக்க மறந்து விடாதே என சொல்லிவிட்டு மீண்டும் அந்த பெண்மணி சிரிப்பது தொடர்பான ஓடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.