இன்றைய ராசிபலன் {12 ஏப்ரல் 2022}

0
184

மேஷம்
மேஷ ராசிக்கு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் ஆதரவாகவும், ஆறுதலாகவும் இருப்பார். காதல் கைகூடிய நாளாகவும் இருக்கும். வாழ்வில் சில அழகிய திருப்புமுனைகள் ஏற்படலாம். தொழில், உத்தியோகத்தில் ஆர்வமும், நல்ல அனுபவம், யோசனைகள் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு இருக்கும். உற்சாகம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான ஆதாயமும், பயணமும் கைகூடும்.

ரிஷபம்

இனிமையான நாளாக இருக்கும். பேச்சில் மென்மையும், நிதானமும் தேவை. திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். குடும்பத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலைமை மேம்படக்கூடிய நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உங்களின் சிறப்பான செயல்பாட்டால் மேலதிகாரிகளின் அபிமானத்தைப் பெறுவீர்கள்.

மிதுனம்

இன்று மகிழ்ச்சிகரமான, நிறைவான நாளாக இருக்கும். திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். ஆன்மிக ஆர்வம் அதிகரிக்கும். கோயில் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்களை சுற்றியுள்ள நபர்களின் அன்பைப் பெறும் அளவிற்கு உங்களின் செயல் தாக்கம் இருக்கும். குடும்ப சூழல் சில மன அழுத்தத்தைக் கொடுப்பதாக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சோர்விலிருந்து மீள்வீர்கள்.

கடகம்

குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் சிறு கசப்பு ஏற்படலாம். உங்கள் அணுகுமுறையில் நீங்கள் அதிக உணர்ச்சிகரமான நபராக இருப்பீர்கள். உங்கள் வேலையில் கவனம் நிலையற்றதாக இருக்கும். உங்கள் தோற்றம் அல்லது உடையில் சில மாற்றங்களைச் செய்ய ஆர்வம் காட்டுவீர்கள். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் உங்களின் குடும்ப தேவைகளை நிறைவேற்ற சிரமப்படுவீர்கள்.

சிம்மம்

உங்களுடைய செயல்பாடுகளுக்கு பரிபூரண வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக பண பற்றாக்குறையை எளிதாக சமாளிப்பீர்கள். லாபகரமான பலனை அடைவீர்கள்.

சொத்து தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் நன்மையில் முடியும். ஒரு சிலருக்கு வலி நல்லது.முதுகு வலி சிறிய அளவில் வந்து செல்லும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் மருத்துவ துறையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைத்துறை கலைத்துறை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும்.

கன்னி

கன்னி ராசியினர் பிறரின் எதிர்ப்பு, வாக்குவாதம் போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும். அன்புக்குரியவர்களை பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. மோதல் போக்கான சூழல் நிகழும். விஷயங்கள் கையை விட்டு வெளியேறும் முன் அவற்றை சரியான முறையில் கையாளவும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொழில், வியாபாரத்தில் மேன்மை தரக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமுகமான உறவு இருக்கும்.

துலாம்

இன்று காதல் உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் துணையின் ஆதரவையும் பாசத்தையும் நீங்கள் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருந்தாலும், சில விஷயங்களால் மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் உங்களுக்கு தரும் ஆலோசனை நல்ல பலனை ஏற்படுத்துவதாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில ஈகோ மோதல் திருமண உறவுகளில் மன வருத்தத்தை ஏற்படுத்தும். நண்பர்களால் சில சிரமங்கள், செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வீடு, பணியிடம் என எந்த இடத்திலும் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் நினைத்த இலக்கை அடைய சுறுசுறுப்பாக உழைப்பீர்கள்.

தனுசு

பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. முடிந்தவரை புதிய ஒப்பந்தங்கள், முதலீடுகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கவும். முன்னர் செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்வது அவசியம். வாழ்க்கைத் துணை ஆதரவாக செயல்படுவார். உங்களின் நேர்மையான அணுகுமுறை ஈர்ப்பு அதிகரிக்கும்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான உணவை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளவும். சோர்வாக உணரலாம்.

மகரம்

நேயர்களே நீங்கள் சற்று நிதானமாக செயல்பட்டால் ஒரு வளமான பலன்களை அடையலாம். பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சற்று விட்டுக்கொடுத்துச் செல்வதால் உறவுகள் சிறக்கும்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதால் லாபகரமான பலன்களே ஏற்படும். வயதில் மூத்தவர்கள் உடன் பேசும்போது பேச்சில் சற்று நிதானமாக இருப்பது அவசியம். முடிந்தவரை அனைத்து விஷயங்களிலும் நிதானமாக செயல்படுவது தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு ச்ந்திராஷமம் இருப்பதால், நேயர்களே உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று கால தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரத்தில் ஆதாரமான பலன்களை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களின் அனுசரணை அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது

கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதால் சாதகமான பலன்கள் பெறலாம். முடிந்தவரை தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மீனம்

நேயர்களே எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக காப்பாற்றக்கூடிய யோகம் உள்ளது. நல்ல நட்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்கு இருந்த அலைச்சல் மன அழுத்தம் எல்லாம் விலகி மன நிம்மதி பெறுவீர்கள்.

பிள்ளைகள் வழியில் இந்த சிறிய பிரச்சனை கூட நீங்கி மன நிம்மதி கூடும். உடனிருப்பவர்களின் ஆதரவு மிக நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது.