அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும்! ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை!

0
461

எதிர்வரும் காலங்களில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருள் பிரச்சினையால், சிறுபோகத்தில் திட்டமிட்டவாறு பயிர்செய்கையினை மேற்கொள்ள முடியாவிட்டால் அரிசியின் விலை அதிகரிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் மற்றும் உர பிரச்சினை காரணமாக எதிர்காலத்தில்நெல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்பொழுது நாட்டரிசி ஒருகிலோகிராம் 210 முதல் 220 ரூபாய்க்கும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 230 ரூபாவுக்கும், கீரி சம்பா ஒரு கிலோகிராம் 270 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.