பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் மறுபடியும் பதவியை பொறுப்பேற்றுள்ளார்!

0
164

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து பியங்கர ஜயரத்னவின் இராஜினாமாவை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை என அரச தலைவர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்த போதிலும், இன்று மாலை அரச தலைவர் மற்றும் பிரதமரை சந்தித்ததன் பின்னர் தனது இராஜாங்க அமைச்சுப் பதவியில் நீடிக்க தீர்மானித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான 41 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்ட நிலையில் அவர்களில் இருந்து 2வது எம்.பி.மீண்டும் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மற்றுமொரு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார இன்று மாலை இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றமை குறிப்பிடத்தக்கது.