ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் முன்பாக பதற்ற சூழ்நிலை

0
454

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையகத்திற்கு வந்ததையடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது