அரசுக்கு எதிராக வவுனியாவில் கண்டன போராட்டம்

0
193

அரசாங்கத்திற்கு எதிராகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் கண்டன போராட்டம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த கண்டன போராட்டம் காலை 10 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வவுனியா மாவட்ட மக்கள் இணைந்து குறித்த கண்டன போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பயங்கவரவாத தடை சட்டத்தை உடன் நீக்கு , குழந்தைகளின் பால்மா எங்கே ? , மீனவர்களின் விவசாயிகளின் உரிமையை பறிக்காதே என்ற பதாகைகளை தாங்கியவாறு இளைஞர்கள் யுவதிகள் பாடசாலை மாணவர்கள் என அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று 4 வது நாளாகவும் காலி முகத்திடலில் தொடர் போராட்டம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .