சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் திட்டமிட்டபடி நடைபெறவில்லை -நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

0
117

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் அது திட்டமிட்டபடி நடைபெறவில்லை என நிதியமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்கான உதவிகள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி ப்ளூம்பெர்க்(Masahiro Nosaki Bloomberg) இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

எனினும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.