விமான விபத்தில் பறிபோன 95 உயிர்…. இவங்கதான் காரணம்…. மீண்டும் குற்றசாட்டு வைத்த போலந்து…..!!!!!

0
65

போலந்து அதிபா் லெக் கச்சின்ஸ்கி மற்றும் பாதுகாப்புப்படையினா் உட்பட 95 போ் இறந்த விமான விபத்திற்கு ரஷ்யாதான் காரணம் என்று அந்நாடு மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

 led by Lech Kaczynski

போலந்து நாட்டின் பெண் அதிபா் லெக் கச்சின்ஸ்கி உட்பட 95 போ் சென்ற சோவியத் தயாரிப்பு விமானம் கடந்த 2010, ஏப்ரல் 10ம் தேதி ரஷ்யாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிபா் உட்பட அனைவரும் உயிரிழந்தனா். இச்சம்பவத்துக்கு ரஷ்யாவின் சதிச்செயல்தான் காரணம் என்று போலந்து முன்பே குற்றம்சாட்டி வந்தது. இந்த நிலையில் இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அரசு சிறப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கையை திங்கட்கிழமை வெளியிட்டு ஆணையத்தின் தலைவா் ஆன்டனி மெசியா்விக்ஸ் செய்தியாளா்களிடம் பேசியதாவது “விமானத்தின் இடதுபக்க இறக்கையில் முதல் குண்டும், மைய பகுதியில் 2வது குண்டும் வெடித்துள்ளது.

ஆகவே ரஷ்ய தரப்பின் சட்டவிரோத தலையீடே இச்சம்பவத்துக்கு காரணம் ஆகும். இந்த சம்பவத்தில் விமானிகளின் தவறு எதுவும் இல்லை என்று கூறினார். போலந்தின் அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துள்ள நிலையில், இந்த விசாரணை அறிக்கை வெளியாகி இருக்கிறது. இப்போரில் உக்ரைனுக்கு போலந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இதற்கு முன்னதாக மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட மனிதத் தவறுகளால் இந்த விபத்து நேர்ந்ததாக, விமான விபத்துகள் குறித்து ஆய்வு செய்யும் போலந்து, ரஷ்யாவை சோ்ந்த இருநிபுணா் குழுக்களின் அறிக்கை தெரிவித்து இருந்தது.