இந்தியாவில் இருந்து வந்தடைந்தது 11,000 மெற்றிக் தொன் அரிசி!

0
165

இந்தியாவில் இருந்து 11,000 மெற்;றிக் தொன் நிறை எடை கொண்ட அரிசி தொகை இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ‘சென் குளோரி’ என்ற கப்பலில் அரிசி கொண்டு வரப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

இந்த தொகை அரிசியுடன் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16,000 மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கப்பட்டதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்த உதவி, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சிறப்புப் பிணைப்பைக் குறிக்கிறது.

அத்துடன்; இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை உறுதிப்படுத்துகிறது என்று உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.