வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மூலம் அத்தியாவசிய மருந்துகளைக் கொள்முதல் செய்ய திட்டம்

0
218

வெளிநாடுகளில் உள்ள பரோபகாரர்கள் மூலம் 273 அத்தியாவசிய மருந்துகளைக் கொள்முதல் செய்வதைத் துரிதப்படுத்துமாறு மருந்து பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சகம் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சிறப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளி விவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனம், உலக வங்கி மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆகியன இலங்கைக்கான மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியக்கடன் திட்டத்தின் கீழ் மருந்து விநியோகம் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகச் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.