அன்பளிப்பாளர்களிடம் உதவி கோரும் மருத்துவர்கள்:கொழும்பில் மருந்துக்கு பற்றாக்குறை

0
71

கொழும்பு சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் விசேட ஒரு வகை இன்சியூலின் மருந்துக்கு சில தினங்களாக தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அந்த இன்சியூலின் மருந்தை பெற்று தருமாறு அன்பளிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒன்றிணைந்த சிலர் பணத்தை சேகரித்து 11 லட்சம் ரூபாய் பெறுமதியான இன்சியூலின் மருந்தை அன்பளிப்பு செய்துள்ளனர்.

வைத்தியசாலையின் நிர்வாகம் அல்லது மருத்துவர்களுடன் தொடர்புக்கொண்டு தேவையான இன்சியூலின் மருந்தை அன்பளிப்பு செய்யுமாறு வைத்தியசாலையின் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.