இன்றைய ராசிபலன் {11 ஏப்ரல் 2022}

0
995

மேஷம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும் நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள். தனவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வெளியூர் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும்.

வேலை தேடுபவர்களுக்கு நாளின் முற்பகுதியில் நல்ல பலன் கிட்டும். புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும் போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு.

ரிஷபம்

இன்றைய நாள் சமமான நாளாக செல்லும். எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும். வேலை தேடுபவர்களுக்கும், வெளிநாட்டு பிரயாணம் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும் நாள் ஆகும்.

எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மருத்துவத்துறை உணவு தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பானதொரு உயர்வைக் காண்பார்கள். கடன் பிரச்சினைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தினாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

மிதுனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வேலை கிடைக்க வாய்ப்புண்டு. பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும்.

காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள்.

கடகம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவியிடையே பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் குடும்ப அமைதி நன்றாக இருக்கும் தொழில் முயற்சிகள் வெற்றியடையும். புதிய தொழில் வாய்ப்புகள் காண பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும். உங்கள் வேலையில் நிர்வாகம் நம்பிக்கை வைக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான காரியங்களை இன்று துவக்க வெற்றி கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் சற்று கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்

கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும் உடல் நலம் நன்றாக இருந்து வரும். வாகன வகையில் அனுகூலம் உண்டு பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.

ஒருசிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்படலாம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிக நல்லது. கோவில் செல்லுதல் தெய்வப் பணிகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும் தனவரவு உண்டு.

கன்னி

இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் அனுசரித்துச் செல்வீர்கள் வாகன வகையில் ஆதாயம் பெறுவீர்கள்.

ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு இருப்பீர்கள். வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்கள் வெற்றி தருவதாக அமையும். கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு மிகச் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.

துலாம்

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நாளின் பிற்பகுதியில் அலைச்சல் அதிகமாகும். தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும். முயற்சிகள் வெற்றியடையும். வெளியூர் மற்றும் வெளி நாட்டில் வேலை தொடர்பான செய்தியை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை வயதானவர்களுக்கு கால் மற்றும் மூச்சு தொடர்பான தொல்லைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும்.

வெளிநாடு செல்ல வாய்ப்பு பலருக்கு உருவாகும். வெளிநாட்டுப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா தொடர்பான காரியங்களை துவக்குவதற்கு இன்று நல்ல நாள் ஆகும். கல்வியில் மாணவர்கள் நல்ல நிலையைப் பெறுவார்கள்.

தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாகவே துவங்கும் சுபகாரிய பேச்சு வார்த்தைகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது வெற்றிக்கனியைப் பெறும் வழியை எளிதாக்கும் கணவன்-மனைவியரிடையே சிறு சிறு பிணக்குகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு என்பதால் வார்த்தையை அளந்து பேசுவது நல்லது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


பெண்களுக்கு பொறுமையைக் கைக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் அமைகிறது தங்களுடைய பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்றே அதிகமானாலும் பாராட்டு பெறும் அளவிற்கு கடின உழைப்பை போட்டு வெற்றி பெறுவீர்கள் வயோதிகர்களுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும்.

மகரம்

நேயர்களுக்கு செய் தொழிலில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் சற்று கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை நாளை தள்ளி வைப்பது நல்லது.

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றிகரமாக முடியும். பெண்களுக்குச் சிறப்பான நாள் ஆகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

கும்பம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக எனக்கு கல்வி நன்றாக இருக்கும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

மீனம்

இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சமமாக இருந்து வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அவர்களால் மன மகிழ்ச்சி ஆதாயம் போன்றவை உண்டாக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் மன நிம்மதி நன்றாக இருக்கும்.