போராட்டத்தின் இடையே மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்

0
148

இலங்கையில் தற்போது மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான கொந்தளிப்பான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காரணமாக பொருளாதார சீர்கேடு மற்றும் முறையான நிர்வாகமின்மையே கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஜனாதிபதி பதவி விலகக் கோரியும் இரண்டாவது நாளாக போராட்டம் இடம்பெற்றது. இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர். “Go home Gota ” என்ற கோஷத்துடன் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

மழை, வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டம் தொடர்கிறது. இந்த நிலையில் இன்று குறித்த களத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்கியுள்ளனர்.

மேலும் போராட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாருக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவர்களுக்கு ரீ, சிற்றுண்டிகளை வழங்கியுள்ளார். தற்போது இடம்பெற்று வரும் போராட்டத்தின் இடையே மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற இந்த நிகழ்வானது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.