அடைமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல நகரங்கள்

0
69

கொழும்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக பல வீதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கொழும்பு, ஆர்மர் வீதி உட்பட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்று முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக இவ்வாறு பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேலும், வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.