கொட்டாஞ்சேனையில் தானியங்கி கைத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

0
151

கொழும்பு கரையோர பொலிஸ் பிரிவில் 9 எம்.எம்.ரக தனியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸார் தெரிவித்துள்னர்.

கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நளின் நிஷாந்தவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கொட்டாஞ்சேனை ராமநாதன் தொடர்மாடி வீடமைப்பு பகுதிக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் சோதனை நடத்திய போதே கைதுத் துப்பாக்கியும் தோட்டகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து கிழங்கு மற்றும் வெங்காயத்தை இறக்குமதி செய்யும் வர்த்தகராக தன்னை வெளிக்காட்டி கொண்டுள்ள இந்த நபர் 16 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மருதானை பொலிஸாரினால் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர் எந்த காரணத்திற்காக துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்தார் என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 53 வயதான இந்த நபர் கொழும்பு ஜெம்பட்டா வீதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.