யாழில் நடு வீதியில் படுத்த இளைஞனால் பரபரப்பு!

0
189

 யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியின் நடுவே  நெல்லியடி பொதுச்சந்தைக்கு அண்மையாக,  இளைஞர் படுத்ததால் பரப்பு ஏற்பட்டது.

25 வயதான இளைஞனே இவ்வாறு நேற்று முன்தினம் வீதியில் கிடந்துள்ளார்.

எரிபொருள், எரிவாயு, பால்மா, உணவுப்பொருட்கள் எதுவும் இல்லையென்றும், தன்னால் வாழ முடியவில்லையென்றும், நிலைமைக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீடு செல்ல வேண்டுமென்றும், அதுவரை வீதியை விட்டு எழுந்திருக்க மாட்டேன் என்றும் இளைஞன் தெரிவித்து விட்டார்.

இதனால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நெல்லியடி பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து, இளைஞனை சமரசப்படுத்தி, அங்கிருந்து அகற்றி, வீதிப்போக்குவரத்தை சீர்செய்ய முயன்றனர்.

எனினும், ஜனாதிபதி வீடு சென்றாலே தானும் வீடு செல்வேன் என இளைஞன் அடம்பிடித்த நிலையில்,  இளைஞன் கைது செய்யப்பட்டு, அன்றைய தினமே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.