கொடூரமான கொலை… கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளைஞரின் தந்தை கண்ணீர்

0
560

ரொறன்ரோவின் சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இந்திய இளைஞரின் தந்தை தமது மகன் தொடர்பில் முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

கனடாவில் வேலை பார்த்துக் கொண்டே படிக்க வேண்டும் என்ற ஆசையில், இந்த ஆண்டு துவக்கத்தில் ரொறன்ரோவுக்கு வந்தவர் 21 வயதான கார்த்திக் வாசுதேவ்.

கடந்த வியாழக்கிழமை சுரங்க ரயில் நிலையத்தின் வெளியே மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார் கார்த்திக். குறித்த சம்பவம் கார்த்திக்கின் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளதுடன், கொள்ளையடிப்பது தான் நோக்கம் என்றால் ஏன் தமது அப்பாவி மகனை கொல்ல வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் கார்த்திக்கின் தந்தை ஜிதேஷ்.

சினேகா கல்லூரியில் படிக்கும் மாணவரான கார்த்திக், வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். ரொறன்ரோவில் உள்ள ஷெர்போர்ன் சுரங்க ரயில் நிலையத்திற்கு வெளியே அவர் பலமுறை சுடப்பட்டு பரிதாபமாக பலியானார்.

6 முதல் 7 முறை கார்த்திக் சுடப்பட்டுள்ளார் எனவும், இது கொடூரமான கொலை எனவும், சம்பவத்தின் போது என்ன நடந்தது, இதன் பின்னணி என்ன என்பது தமக்கு தெரிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் ஜிதேஷ்.

தற்போது கனாடா தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜிதேஷ் குறிப்பிட்டுள்ளார்.