அரசாங்கத்திற்கு எதிராக நுவரெலியாவில் போராட்டம்; வர்த்தகநிலையங்கள் மூடல்

0
522

நுவரெலியாவில் அரசாங்கத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 9 மணி அளவில் முன்னெடுக்கபட்டுள்ளது.

நுவரெலியாவில் வர்த்தக நிலையங்களில் தொழில் புரியும் இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக மக்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு , எரிபொருள் விலையேற்றம் , டீசல் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றைக் கண்டித்தே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “கோ ஹோம் கோட்டா ” , “கோட்டாபயாவே வெளியேறு” ”குடும்ப ஆட்சி வேண்டாம்” போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் , பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதில் சில வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு வழங்கிவருகின்றனர்

.இந்த நிலையில் நாட்டின் சகல பகுதிகளிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.