மேடையில் தொகுப்பாளரை அறைந்த ஒஸ்கார் வெற்றியாளருக்கு 10 வருட தடை!

0
576

ஓஸ்கார் விருது வழங்களின்போது தொகுப்பாளரான நகைச்சுவையாளர் கிறிஸ் ராக்கை அறைந்தமை காரணமாக, வில் ஸ்மித்துக்கு, ஒஸ்கார் அல்லது வேறு எந்த விருதுகள் நிகழ்விலும் கலந்துகொள்ள 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெ மோசன் பிக்சர் எகாடமி இந்த தடையை நேற்று விதித்துள்ளது. ஸ்மித்தின் நடவடிக்கை குறித்து விவாதித்த எகாடமியின் ஆளுநர் குழு இந்த முடிவை அறிவித்துள்ளது.

94வது ஒஸ்கார் விருதுகள் நிகழ்வு, சமூகத்தில் நம்பமுடியாத கொண்டாட்டமாக கருதப்பட்டது.

எனினும் ஸ்மித் மேடையில் வெளிப்படுத்திய கோபம், ஏற்றுக்கொள்ள முடியாத தீங்கு விளைவிக்கும் நடத்தையாக மாறியது என்று தெ மோசன் பிக்சர் எகாடமி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் எக்காடமியின் முடிவை தாம் ஏற்றுக்கொள்வதாக ஸ்மித் பதிலளித்துள்ளார்.

தமது நடவடிக்கைகள் அதிர்ச்சியூட்டும், வேதனையான மற்றும் மன்னிக்க முடியாதவை என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நகைச்சுவையாளரை மேடையில் வைத்து அறைந்தபோதும், ஸ்மித் வெற்றி கொண்ட 94வது ஒஸ்கார் விருது திரும்பப் பெறப்படமாட்டாது.

அத்துடன் அடுத்த 10 வருட காலத்திற்குள் அவர் பரிந்துரைக்கப்படுவதற்கும் மேலும் வெற்றி பெறுவதற்கும் அவர் தகுதியுடையவராக இருப்பார். எனினும் அவரால் விருதை பெற்றுக்கொள்ளமுடியாது.