பேரூந்துகளுக்கு விநியோகிக்கப்படும் டீசலில் மண்ணெண்ணெய் கலப்படம் ! டீசல் மாதிரிகள் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

0
204

பேரூந்துகளுக்கு விநியோகிக்கப்படும் ஒட்டோ டீசல் மண்ணெண்ணெய் போன்ற துர்நாற்றத்தை கொண்டிருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக பேரூந்துகளுக்கு விநியோகிக்கப்படும் ஒட்டோ டீசலின் தரத்தில் பிரச்சினை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ஊடகவியலாளர்களிடம் இரண்டு டீசல் மாதிரிகளை காண்பித்த அவர், ஒரு மாதிரி மண்ணெண்ணெய் துர்நாற்றம் வீசுவதாகவும் மற்றும் ஒன்றில் எவ்வித நாற்றமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்

எனவே நாட்டுக்கு எடுத்து வரப்படும் டீசலின் தரத்தில் கடுமையான சிக்கல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் டீசல் மாதிரிகள் விசாரணைக்காக காவல்துறை மா அதிபரிடம் ஒப்படைக்கப்படும் என்று கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்