இலங்கையில் தீவிரமடையும் போராட்டம்! தேவை ஏற்பட்டால் முப்படையினரும் களமிறக்கப்படலாம்

0
156

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தேவையான போது பொலிஸாருக்கு உதவுவதற்கு முப்படையினரின் உதவியை பொது பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளது.

அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் தெரிவித்தார்.

இதேவேளை, போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக இன்று கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மேலதிக பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.