ஈஸ்டர் தாக்குதல் சதிகாரர்களால் அவர்கள் பெற்ற அதிகாரத்தை பாதுகாக்க முடியாது – கொழும்பு பேராயர்

0
104

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்கள் யார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வருகின்றது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை முன்னிறுத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்பவர்களால் நீண்ட காலம் அதிகாரத்தில் இருக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்