சர்வதேச நாணய நிதியத்துடனான முக்கிய சந்திப்பு ஒத்திவைப்பு! திடீர் தகவல்

0
303

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக சர்வதேச நாணய நிதியத்துடனான முக்கிய சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்வரும் 11 ஆம் திகதி வொஷிங்டனில் கூட்டம் நடத்தவிருந்தது.

இருப்பினும் திடீரென இக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று (08) இரவு முதல் அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.