பொருளாதார தடை காரணமாக ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சி:வெளிநாட்டினரிடம் கடன் கேட்க்கும் ரஷ்ய தொழிலதிபர்!

0
55

ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள தனது கோடீஸ்வர் நண்பர்களிடம் கடன் கேட்டு அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இதன் விளைவாக ரஷ்ய பொருளாதாரம், ரூபிள் மதிப்பு மற்றும் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.

அதுமட்டுமின்றி,சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த பல ரஷ்ய தொழிலதிபர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்ய தொழிலதிபரான Roman Abramovich, தனக்கு சேவை செய்த ஊழியர்களுக்கு பில் செலுத்தக்கூட பணம் இல்லாததால், அமெரிக்காவில் உள்ள தனது கோடீஸ்வர நண்பர்களிடம் மில்லியன் கணக்கில் பணம் கடன் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையால் பாதிக்கப்பட்டுள்ள Roman Abramovich, ரோத்ஸ்சைல்ட் குடும்பம், ஹலிவுட் தயாரிப்பாளர் Brett Ratner ஆகியோரிடம் தலா 1 மில்லியம் கடன் கேட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி நண்பர்கள் பலரிடமும் அவர் கடன் கேட்டு அணுகியுள்ளதாக Daily Mail தெரிவித்துள்ளது.

எனினும், பிரித்தானியா செய்தித்தாளான Daily Mail-லில் வெளியான தகவல்களை Roman Abramovich திட்டவட்டமாக மறுத்துள்ளார்.